சிறுமிக்கு தொல்லை எலக்ட்ரீஷியன் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், ரெட்டி தெருவில் வசித்து வருபவர் சிவராமன் (48). எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் சிவராமன் அதே பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 11 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் அழுதபடியே கூறியிருக்கிறாள். இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து,  சிவராமனை கைது செய்தனர். பின்னர், அவரை   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: