சிட்லப்பாக்கத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்து வியாபாரி பலியான இடத்தை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு: சிசிடிவி பதிவு பெற்று விசாரணை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், முத்துலட்சுமி நகர், சாரங்கன் அவென்யூ, கல்யாணாசுந்தரம் தெருவை சேர்ந்தவர் சேதுராஜ் (42). இவர், கடந்த 16ம் தேதி இரவு அவரது வீட்டின் வெளியே தெரு நாய்களுக்கு உணவு வைத்துக்கொண்டிருந்தபோது சேதமடைந்து இருந்த மின் கம்பம் திடீர் என அவர் மீது முறிந்து கீழே விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் சோபியா இந்த விபத்திற்கான காரணம்? மின்கம்பத்தின் தன்மை எப்படி இருந்தது? மின்கம்பம் வாகனம் மோதி விழுந்ததா? மின்கம்பம் பழுதடைந்து இருந்ததா? உடைந்த மின் கம்பத்தின் தரம் சேதமடைந்த பகுதி, அதில் என்ன என்ன இணைப்புகள் இருந்தது? மின்கம்பத்தின் நீளம் மற்றும் அகலம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பின்னர் உடைந்த மின் கம்பம் விபத்து நடந்த இடம் ஆகியவற்றை வீடியோ, படம் எடுத்துக்கொண்டார்.

Advertising
Advertising

மேலும் மின்கம்பம் விழுந்தது குறித்து பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினார். அருகில் இருந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் சம்பவம் குறித்து பதிவாகி இருகின்றது. ஆனால் அந்த வீட்டில் மின் இணைப்பு இன்னும் கொடுக்கப்படாததால் அந்த காட்சிகளை பார்க்க முடியவில்லை. இதனையடுத்து சேலையூர் காவல் உதவி ஆணையர் சகாதேவன் தலைமையில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகியிருந்த டிவிஆர் கருவியை சிட்லப்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்று ஆய்வு செய்தனர்.

Related Stories: