×

திருவண்ணாமலை கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

திருவில்லிபுத்தூர், செப். 17: திருவில்லிபுத்தூர் அருகே, திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும், சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். விருதுநகர், நெல்லை, மதுரை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.
இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை செப்.21ல் வருகிறது. இதனையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில், சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை கண்காணிக்க, கோயிலில் 30 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து ஆண்டாள் கோயிலை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘ஒன்றரை லட்சம் ரூபாய் செல்வில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. கோயில் பாதுகாப்பிற்கும், கோயிலுக்கு வரும் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் கேமராக்கள் நிரந்தரமாக இயங்கும்’ என்றார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...