×

தீபாவளி பண்டிகைக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு 2.45 கோடி ரூபாய்

விருதுநகர், செப். 17: விருதுநகர் மாவட்டத்தில் 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.2.45 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து பேசியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. விருதுநகர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பருத்தி, பட்டுச் சேலைகள், வெண்பட்டு சேலைகள்,
உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற ரசாயன உரங்களின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட
ஆர்கானிக் புடவைகள், கண்டாங்கி சேலைகள், படுக்கை விடுப்புகள், நவீன ஜீன்ஸ், டாப்ஸ், குர்தா வேட்டி, சுடிதார், என அனைத்து வித ஆடைகள் விற்பனைக்கு உள்ளது.
அரசு மற்றும் பொதுத்துதுறை நிறுவன ஊழியர்களுக்கு கடன் விற்பனை உண்டு. கோ-ஆப்டெக்ஸ் துணிகளை இணைய தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, திருவில்லிபுத்தூர் ஆகிய 5 விற்பனை நிலையங்கள் கடந்த தீபாவளியின் போது ரூ.2.12 கோடிக்கு விற்பனை செய்தன. நடப்பாண்டு இலக்காக ரூ.2.45 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.45.53 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. நடப்பாண்டில் விருதுநகர் விற்பனை நிலையம் ரூ.70 லட்சம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர்கள் குணசேகரன், சந்தனமாரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : festival ,Diwali ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...