×

ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சஸ்பெண்டை கண்டித்து போராட்டம்

தேனி, செப். 17: ஆண்டிபட்டி வட்டார  ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை கலெக்டர் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறையினர் நேற்று தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆண்டிபட்டியில் குடிமராமத்து பணி சம்பந்தமாக ஆய்வு செய்த கலெக்டர் பல்லவிபல்தேவ், ஆண்டிபட்டி  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபத்ரா, பணி மேற்பார்வையாளர் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் தற்காலிக தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்செயலைக்கண்டித்தும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இருவரது நீக்கத்தையும் வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியத்திலும் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தேனிமாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊரகவளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகரிகள் உள்ளிட்ட 325 பேரும் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஊரக வளர்ச்சி பணிகள் நேற்று முற்றிலும் முடங்கின.  தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஊரகவளர்ச்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஞானதிருப்பதி, செயலாளர் முகமது அலி ஜின்னா, பணி மேற்பார்வையாளர்கள் சங்க மாநில தலைவர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண் டு பேசினர். அப்போது, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களை சேர்ந்த ஊரகவளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.


Tags : Rural Development Officers ,
× RELATED காலமுறை ஊதியம் வழங்க கேட்டு ஊரக...