×

சிலமலை புதுக்காலனியில் அதிகாரிகள் ஆய்வு

போடி, செப். 17:போடி அருகே சிலமலை கிராம ஊராட்சியில் சூலப்புரம், டிஎஸ்பி காலனி, புதுக்காலனி பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிலமலை புதுக்காலனியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்த தினகரனில் படங்களுடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக,  தேனி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்றுமுன்தினம் சிலமலை புதுக்காலனியில் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து ஏபிடிஓ சுரேஷ் கூறியதாவது: குடிநீர் தொட்டி சிறிதாக 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பற்றாகுறையாக இருக்கிறது. உப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட தண்ணீருடன் சிலமலை சூலப்புரம் தண்ணீரையும் சேர்த்து தினந்தோறும் தடையின்றி குடிநீர் வழங்கப்படும். மேலும் நான்கு தெருக்களிலுள்ள மண்சாலை விரைவில் பேவர் பிளாக் சாலையாக மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும். தாழ்வாக செல்லும் வயர்கள் உயர்த்தப்படுவதுடன், தெருவிளக்குகளும் பொருத்தப்படும் என்றும் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தங்கள் பகுதியின் அடிப்படை பிரச்னைகள் தீர அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கைக்கு உதவிய தினகரன் நாளிதழுக்கு சிலமலை புதுக்காலனி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

Tags : Silamalai Pudukkalani ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு