×

நிலத்தடி நீரை உறிஞ்சும் மினரல் வாட்டர் நிறுவனம்

விருதுநகர், செப்.17: விருதுநகர் அருகே, நிலத்தடி நீரை உறிஞ்சும் மினரல் வாட்டர் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி, பெரிய மருளுத்து கிராம மக்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
விருதுநகர் சாத்தூர் இடையே பெரிய மருளுத்து கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், வேல்சாமி என்பவரது தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெரிய மருளுத்து கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.கிராமத்தில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவனம் ஆயிரம் அடிக்கு போர்வெல் அமைத்து, தண்ணீரை பல ஆண்டுகளாக தினசரி ஒரு லட்சம் லிட்டர் வரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைந்து விவசாய கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. மேலும் கிராம மக்களின் குடிநீர் ஆதார போர்வெல்களிலும், தெருக்களில் உள்ள போர்வேல்களிலும் தண்ணீரில்லை
. இதனால், கிராம மக்கள் குடிக்க மற்றும் பிற உபயோகத்திற்கான தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர்.
 விவசாயத்தையும், கிராம மக்களின் குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்து கிராம மக்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : water company ,
× RELATED நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது...