×

தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் 15 நாட்களாக பற்றி எரியும் ‘தீ’ அமைச்சர் வருகையால் அணைக்கும் பணி மும்முரம் அமைச்சரிடம் புகார் மனு அளித்த பொதுமக்கள்

காரைக்குடி, செப். 17: தேவகோட்டை ரஸ்தா பகுதியில் 15 நாட்களுக்கும் மேலாக குப்பை எரிவதால் பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருவதாக பொதுமக்கள் அமைச்சர் வேலுமணியிடம் புகார் அளித்தனர்.
காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் சேகரிப்பு பகுதியை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் பாஸ்கரன், கேஆர்.ராமசாமி எம்எல்ஏ, முன்னாள் எம்பி செந்தில்நாதன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தேவகோட்டை ரஸ்தா பகுதியில் நகராட்சி சார்பில் உள்ள குப்பை கிடங்கில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குப்பை பற்றி எரிந்து வருவதால் பல்வேறு உடல் உபாதைகள் வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தமிழகம் முழுவதும் குப்பை பிரச்சனை உள்ளது. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் 19 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மறுசுழற்சி செய்ய புதிய நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பெரிய அளவில் மின் உற்பத்தி எடுக்க முடியவில்லை. காரைக்குடியில் உள்ள குப்பை கிடங்கில் வெளிநபர்கள் உள்ளே நுழைய முடியாத அளவில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும். கண்காணிப்புக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும். தீ பரவினால் ஆபத்து ஏற்படும். தீ எரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொழில் வணிகக்கழகம் சார்பில் அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில், காரைக்குடி பகுதியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
சங்கராபுரம் ஊராட்சியை இந்நகராட்சியுடன் இணைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணி முடிந்த பகுதிகளில் சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். மழை பொழிவு குறைவே குடிநீர் பற்றக்குறைக்கு காரணம். மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த மக்கள் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர். காரைக்குடி பகுதியில் 112.53 கோடியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் முடிக்கப்படும்.
குழாய் பதிக்கும் பணி 20 சதவீதம், சுத்திகரிக்கும் பகுதி கட்டுமான பணி 40 சதவீதம் முடிந்துள்ளது. பணி முடிந்த பகுதிகளில் சாலை வசதி செய்ய உரிய நிதி ஒதுக்கப்படும். இம் மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணி சிறப்பாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரும். காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும் என்றார்.

Tags : public ,Mummuram Minister ,garbage warehouse ,area ,Devakottai ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...