×

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் முறையாக குடிநீர் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம்
முறையாக குடிநீர் வழங்கக்கோரி
கலெக்டர் அலுவலகத்தில் மனு
சிவகங்கை, செப். 17: காளையார்கோவில் அருகே சிறியூர் கிராம மக்கள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: காளையார்கோவில் தாலுகா உசிலங்குளம் ஊராட்சியில் சிறியூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் எங்கள் கிராமத்திற்கு பதிக்கப்பட்டு அதன் மூலம் பல ஆண்டுகளாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டாற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுத்து வந்த நிலையில் கடும் வெப்பம் காரணமாக நிலத்தடிநீர் கீழே சென்றுவிட்டது. இதனால் ஆற்றிலும் நீர் கிடைக்கவில்லை. தற்போது குடிநீர் கிடைக்காமல் அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்று ஒரு குடம் ரூ.5க்கு குடிநீர் வாங்கி வருகிறோம்.
 எனவே இதனால் கடும் பாதிப்படைந்து வருகிறோம். எனவே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த நீர் எங்கள் கிராமத்திற்கு முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED மது விற்றவர் கைது