கிணற்றில் தவறிவிழுந்த இளம்பெண் மீட்பு

திருமங்கலம், செப்.17: திருமங்கலத்தில் கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் படுகாயமடைந்தார். திருமங்கலம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் மலைராஜன் மனைவி பவுன்பாண்டிம்மாள்(25). நேற்று காலை இவர் வழக்கம் போல் வீட்டில் துணிகளை துவைத்து காயபோட்டார். மூடிய உறைகிணற்றின்மீது துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மூடி உடைந்து கிணற்றில் தவறி விழுந்தார். இவரது அலறல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் திருமங்கலம் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் வந்து கிணற்றில் தவறி விழுந்த பவுன்பாண்டியம்மாளை காயங்களுடன் மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: