×

அலங்காநல்லூரில் விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம்

அலங்காநல்லூர், செப்.17: அலங்காநல்லூர் வட்டார தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் சிறு, குறு விவசாயிகள் தகுதி சான்று வழங்கும் முகாம் நடைபெற்றது.
வாடிப்பட்டி துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் ரிச்வானாபர்வீன், வருவாய் ஆய்வாளர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசன வசதி மற்றும் சிறு, குறு விவசாயிகள் சான்று வழங்க தகுதியுள்ள பயனாளிகளிடம் இருந்து விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் அதிகாரிகள் பேசுகையில், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் சொட்டு நீர் பாசன வசதி பெறுவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் அலங்காநல்லுார் வட்டாரத்தில் அந்தந்த பிர்காவிற்கு உட்பட்ட வருவாய் அலுவலகத்தில் 19ம் தேதி வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் ஆதார், ரேஷன் கார்டு, 2 போட்டோ, கம்ப்யூட்டர் சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 99941 41379 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதில் துணை தோட்டகலை அலுவலர் பிச்சைமணி மற்றும் உதவி அலுவலர்கள் ஆறுமுகம், சிவகுமார், சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : camp ,
× RELATED சிறப்பு ரத்ததான முகாம்