கத்தியை காட்டி டூவீலர் பறிப்பு

அவனியாபுரம், செப்.17: அவனியாபுரம் அருகே ரிங்ரோட்டில் கத்தியை காட்டி வாலிபரின் டூவீலர் பறிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் பெருங்குடி அருகே ஆவியூரை சேர்ந்தவர் அன்பரசன் (25). இவர் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தனது தந்தைக்கு டூவீலரில் மதிய உணவு கொண்டு சென்றார். ரிங் ரோட்டில் அவரை மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி டூவீலரை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து அன்பரசன் பெருங்குடி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

Tags : Tweeler ,
× RELATED சாத்தான்குளம் அருகே ஆட்டோ டிரைவரை பிளேடால் வெட்டிய தொழிலாளிக்கு வலை