ஆதிகலியுகப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பேரையூர், செப்.17: பேரையூர் டி.கல்லுப்பட்டி அருகே கொல்லவீரன்பட்டி மருதுபாண்டியர் நகரிலுள்ள ஆதிகலியுகப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் யாகவேள்வி அமைக்கப்பட்டு முதல்கால பூஜை, இரண்டாம்கால யாகபூஜை நடைபெற்றது. யாகபூஜை முடிந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலை வலம் சுற்றி வந்து புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். ஜோதிடர் அறிவழகன் சொற்பொழிவாற்றினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தொட்டணம்பட்டி தோப்படியான் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இறுதியில் கடம்புறப்பாடு நடைபெற்று விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: