×

மயான பாதை மூடலால் அவதி கரிசல்பட்டி மக்கள் மனு

திண்டுக்கல், செப். 17: கரிசல்பட்டியில் மயான பாதையை மீட்டுத்தர கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கூறியதாவது,
‘எங்கள் பகுதியில் சர்வே எண்- 279 என்ற எண்ணில் உள்ள மந்தைகுளம் கரைமேல் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மயான போக்குவரத்து பாதை உள்ளது. தற்போது குளத்தின் கரையை அகலப்படுத்துவதாக கூறி கிளாளர்க் மனோகர் ஜெரால்ட் அப்பகுதியில் ஊன்றியிருந்த கல்லை பிடுங்கி மாற்றி ஊன்றி விட்டார். இதனால் மயானத்திற்கு போய் வர முடியாத நிலை உள்ளது. எனவே கல்லை முறையாக ஊன்றி மயான பாதையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரிக்க அறிவுறுத்தினார்.
பழநி கோயிலில் உணவு கண்காட்சி

Tags : Awati Karisalpatti ,closure ,
× RELATED மத வழிபாட்டுத் தலங்களை திறக்க கோரிய மனு: உயர்நீமன்றம் தள்ளுபடி