தேவையான நெல் விதை இருப்பில் உள்ளது பழநி வேளாண் உதவி இயக்குநர் தகவல்

பழநி, செப். 17:  பழநி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் சான்று பெற்ற நெல் விதைகளான சிஓ 51, எம்டியூ 6, டிகேஎம் 13 ஆகிய குறைந்த வயதுடைய அதிக மகசூல் தரக்கூடிய விதைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 கிலோவிற்கு 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. சிஒ 6 ரக உளுந்து விதை விதை கிராம திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. கே9 நிலக்கடலை விதை தேசிய உணவு தானிய உற்பத்தி இயக்கம் திட்டத்தின்கீழ் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது.

    பருத்தி விதையில் சுரபி ரகம் தமிழ்நாடு பருத்து சாகுபடி இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள், பருத்தி, பயறு நுண்ணூட்டங்கள் போதிய அளவில் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பழநி வட்டார விவசாயிகள் வேளாண் திட்டங்களை பயன்படுத்தி பயனடையலாமெனவும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாமென பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்

Related Stories: