×

அலங்காநல்லூர், சோழவந்தானில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அலங்கை/சோழவந்தான், செப்.15: அலங்காநல்லூர், சோழவந்தான் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்களில் பேரூராட்சிகளின் செயல் அலுவலர் சுந்தரி தலைமையில் பணியாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக அபராதம் விதித்தனர். இதேபோல் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்ட பகுதியில் செயல் அலுவலர் ஜீலான்பானு தலைமையில் அலுவலர்கள் முத்துக்குமார், சிவக்குமார், குருசங்கர் மற்றும் பணியாளர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது பலசரக்கு, காய்கறி கடைகள் மற்றும் கறிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர். மீண்டும் இதுபோல் பயன்படுத்தக்கூடாது என ஆலோசனைகள் வழங்கினர். இதேபோல் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், கடை விளம்பர பேனர்களையும் அப்புறப்படுத்தி பறிமுதல் செய்தனர். இதில் கல்யாணசுந்தரம், சுந்தர்ராஜன், பசுபதி, சோணை, பூவலிங்கம், சதீஸ், அசோக், பாண்டி, பாலமுருகன் உள்ளிட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய...