டூவீலர் மீது வேன் மோதி மூதாட்டி பலி

வாடிப்பட்டி, செப்.17: வாடிப்பட்டி அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாலகுருநாதன்(38). இவர் தனது உறவினர் மகாலட்சுமி60) உடன் மதுரை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே நகரி எனும் இடத்தில் வந்தபோது பின்புறமாக வந்த சரக்கு வேன் டூவீலர் மீது மோதியது. இதில் மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலகுருநாதன் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: