ஓசோன் தினத்தில் நடப்பட்ட மரங்கள்

மதுரை, செப்.17: உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரை கிரீன் மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். துணை முதல்வர் தனலெட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் சங்குமணி, முன்னாள் முதல்வர் சண்முகசுந்தரம், மருத்துவ பேராசிரியர் பாலாஜிநாதன், டாக்டர்கள் கீதா, கண்ணன், பாலஅபிராமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அகர்வால் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மதுரை கிரீன் ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் கூறுகையில், மருத்துவக்கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய இடங்களில், கடம்பம், மருதம் மற்றும் வேங்கை போன்ற பாரம்பரிய 200 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. ேமலும் உலக தமிழ்சங்க கட்டிடத்திற்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்ய தயாராக உள்ளோம்’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: