×

முதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக இல்லை மனு அளித்து கதறல்

திண்டுக்கல், செப். 17:  முதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக வழங்கவில்லையென கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளோடு மூதாட்டிகள் மனு அளித்தனர்.
திண்டுக்கல் அடுத்த ஏ.வெள்ளோடு, செபஸ்தியார் தெருவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்ெதாகையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தி விட்டனர்.
இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்து விட்டோம். ஆனால் இதுவரை எங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. இந்த பணத்தை வைத்துதான் எங்களுக்கு உணவு, மருத்துவ செலவுகளை பார்க்க வேண்டியுள்ளது. எனவே முதியோர் உதவித்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Tags :
× RELATED மத வழிபாட்டுத் தலங்களை திறக்க கோரிய மனு: உயர்நீமன்றம் தள்ளுபடி