இலவச நிலவேம்பு குடிநீர் சூரணம் விநியோகம் மாவட்ட சித்த மருத்துவர் தகவல்

திருச்சி, செப்.17: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சித்த மருத்துவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மழைக்காலம் தொடங்கி விட்டதால் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்க தொடங்கி விட்டது. டெங்கு காய்ச்சல் மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் சூரணம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சித்த மருத்துவர்கள் ஆலோசனை பெற்று நிலவேம்பு குடிநீரை தினம் ஒருவேளை அனைவரும் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். மேலும் போலியான நிலவேம்பு குடிநீர் சூரணத்தை பொதுமக்கள் வாங்கி ஏமாறவேண்டாம். நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வெளியில் வாங்கினால் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், கலந்துள்ள மூலப்பொருட்களின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலை இவை அத்தனையும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட குறிப்புகள் இருந்தால் மட்டுமே உண்மையான நிலவேம்புகுடிநீர் சூரணம். இதுகுறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் 7708062682 இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: