கிண்டியில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை, செப்.17: சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டம் தென் சென்னை வருவாய் கோட்டம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம் அருகில், அண்ணாசாலை, கிண்டி சென்னை-32 என்ற முகவரியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 18ம் தேதி(நாளை) முற்பகல் 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

Advertising
Advertising

இச்சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கிண்டி, மயிலாப்பூர், ஆலந்தூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டங்களில் வசிக்கும் ெபாதுமக்கள் வருவாய் துறை தொடர்புடைய மனுக்களை நேரிடையாக அளித்து பயன்பெறுமாறு கேட்டு ெகாள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: