மண்ணச்சநல்லூர் அருகே விழும் நிலையில் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்

மண்ணச்சநல்லூர், செப்.17: மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் செல்லும் சாலையில் சிப்பாய் பண்ணையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் அடிப்பகுதியில் முற்றிலும் சேதம் அடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வெறும் கம்பி மட்டும் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த பளையூர் பால் என்பர் கூறியது: சிப்பாய்பண்ணையில் இருந்து பூனாம்பாளையம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் மும்முனை மின்சாரம் செல்கிறது. இதன் அடிப்பகுதியில் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் பூனாம்பாளையம் மற்றும் சிப்பாய் பண்ணையில் இருந்து மண்ணச்சநல்லூருக்கு மாணவ, மாணவிகள் நாள் தோறும் சென்று வருகின்றனர். இது தவிர வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertising
Advertising

Related Stories: