துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

திருச்சி, செப்.17: திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது. துப்புரவு பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை தான் தன் சுத்தம் என்றும், பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ளுதல் சம்மந்தமான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவின்பேரில் திருச்சி நகராட்சி ஆணையர் வழிகாட்டுதலின்படி இரண்டாம் கட்டமாக பயிற்சி கடந்த 13ம்தேதி துவங்கி தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. பயிற்சியில் திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் மணப்பாறை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியினை ரங்கம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன், நிர்வாக அலுவலர் ரமேஷ்குமார், தொடங்கி வைத்தனர். சுகாதார அலுவலர் தலைவிரிச்சான், சுகாதார ஆய்வாளர் திருப்பதி, பரசுராமன் உள்ளிட்டவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Advertising
Advertising

Related Stories: