தாம்பரத்தில் பரபரப்பு 35 அடி கிணற்றில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு

தாம்பரம், செப். 17: தாம்பரம் அடுத்த கடப்பேரி, திருவிக நகர், 3வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (33). இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகேயுள்ள காட்டு பகுதியில் நடந்து சென்றபோது 35 அடி ஆழ கிணற்றுக்குள் எதிர்பாராத வகையில் திடீர் என தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

Advertising
Advertising

இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் சந்தோஷை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர். இதில், சந்தோஷிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: