மக்கள் குறைதீர் கூட்டம் 533 மனுக்கள் குவிந்தன

திருச்சி, செப்.17: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 533 மனுக்கள் குவிந்தன. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 210 மனுக்கள் உள்பட மொத்தம் 533 மனுக்கள் பெறப்பட்டது. அப்போது கலெக்டரிடம் மனுகொடுக்க கோரிக்கை மனுக்களுடன் வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சிவராசு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். டிஆர்ஓ சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜ், சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: