மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை, செப். 17: தகவல் தொழில்நுட்பம் வழித்தடம் கோட்டத்தில் வரும்  19ம் தேதி மின்நுகர்வோர்   குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தகவல் தொழில்நுட்பம் வழித்தடம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10.30 மணிக்கு தகவல் தொழில்நுட்பம் வழித்தடம், செயற்பொறியாளர் அலுவலகம், 1வது தளம், துணைமின் நிலைய வளாகம், தரமணி, சென்னை-113 என்ற முகவரியில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: