சுற்றுலா பயணிகளால் களை கட்டிய பண்ணவாடி மீன் விற்பனை ஜோர்

பண்ணவாடி பரிசல் துறை பகுதியில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், பண்ணவாடி பரிசல் துறை களை கட்டியுள்ளது.  இதனால் அங்கு மீன் விற்பனை ஜோராக நடக்கிறது.  மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 9 நாட்களுக்கு ேமலாக 120 அடிக்கு குறையாமல் உள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை, தண்ணீர் நிரம்பி கடல் போல் காணப்படுகிறது. இந்த காட்சியை காண மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் ஏரளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் காவிரியில் நீராடி, அங்குள்ள மீன்கடைகளில் சுடச்சுட பொறித்த மீன்களை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இதனால் அங்குள்ள மீன் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சுவையான மீன்களை சாப்பிட்டு செல்ல, கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத போது வெறிச்சோடி கிடந்த பண்ணவாடி பரிசல் துறை, தற்போது சுற்றுலா பயணிகள் வருகையால் திருவிழா போல் களை கட்டியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: