தம்மம்பட்டி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு

நடத்திய 4 பேர் மீது வழக்குதம்மம்பட்டி, செப்.17: தம்மம்பட்டி அடுத்துள்ள செந்தாரப்பட்டி அருகே, மண்மலை பாலக்காட்டில், நேற்று முன்தினம், மலையடிவார மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, செங்கட்டு, நரிப்பாடி, 95.பேளூர் ஆகிய ஊர்களிலிருந்து 100 காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கியவர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் காளைகள் முட்டியதில் 5  பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக, மண்மலை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் அளித்த புகாரின் பேரில், ஜல்லிக்கட்டு நடத்திய குழுவைச் சேர்ந்த பாம்பையன்(58), ஜெயராமன்(45), ரவி(35), விஜயன்(25) ஆகிய 4 பேர் மீது, நேற்று தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: