தம்மம்பட்டியில் மழை வேண்டி சிறப்பு யாகம்

தம்மம்பட்டி, செப்.17:   சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால், தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழையின்றி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் ஒன்று கூடி, மழை வேண்டி, வருகிற 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சிவன் கோயிலில் பொது யாகம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், நாளை தண்ணீரில் அமர்ந்து வருண ஜெபம் நடத்தப்பட உள்ளது. தம்மம்பட்டி சுவேத நதியில் நீர் பெருக்கெடுத்து வரவும், மழை பெய்து சுபிட்சம் நிலவவும், வருண யாகம் நடத்தப்படுவதாக விழா ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: