தலைவாசலில் முள்ளங்கி கிலோ ₹30க்கு விற்பனை

ஆத்தூர், செப்.17:  தலைவாசல் தினசரி மார்க்கெட்டில், முள்ளங்கி வரத்து குறைவால், கிலோ ₹30க்கு விற்பனையாகிறது. தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தலைவாசல், வீரகனூர், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காயகறிகளை  விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதிகாலையில் கூடுகின்ற இச்சந்தையில் பெரம்பலூர், சிதம்பரம், நெய்வேலி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். நேற்று சந்தைக்கு தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெள்ளை முள்ளங்கியை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். வரத்து குறைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ முள்ளங்கி ₹30 வரை விற்பனையானது. கடந்த சில வாரங்களாக நாட்டுக் காய்கறிகளான கத்தரி, வெண்டை, புடலை, பீர்க்கன் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால், அதிக விலைக்கு விற்பனையானது. அதேபோல தற்போது முள்ளங்கி வரத்து குறைவால், கிலோ ₹30க்கு விற்பனையானது.

Advertising
Advertising

Related Stories: