ஓமலூர் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

ஓமலூர், செப்.17:   ஓமலூர் பள்ளிகளில் நடைபெற்று வரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வாரத்தில் ஒருநாள் காலை வழிபாட்டு கூட்டத்தில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, வாரத்தில் ஒரு நாள் அனைத்து பள்ளிகளிலும், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் விழிப்புணர்வு வாசகங்களை, உறுதிமொழியாக எடுக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள், இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவேன் நான், பழகிய பின்னரே வாகனம் ஓட்டுவேன் நான், ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன் நான்.

என் பெற்றோருக்கும், ஓட்டுநர்களுக்கும் வாகனம் ஓட்டும் போது, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணிந்து கொள்ள வற்புறுத்துவேன். ஓட்டுனர், வாகனத்தை ஓட்டும்போது, செல்போன் உபயோகிப்பதை அனுமதிக்க மாட்டேன். பேருந்தின் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன் என்று உறுதிமொழியையும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த உறுதிமொழியை 2019-20ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு வாரமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுv கூறப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி தனியார் பள்ளிகள் மட்டுமே முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளிலும் உறுதிமொழி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: