×

ஆவடி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 100 மீட்டர் நீள விளம்பர சுவரை அகற்ற வேண்டும்: கலெக்டரிடம் திமுக எம்.எல்.ஏ.மனு

திருவள்ளூர், செப். 17: ஆவடி பஸ் நிலையத்தில் பெயர் பலகையை மறைத்து, 100 மீட்டர் விளம்பரம் வைத்துள்ளதால், பஸ் நிலையம் இருளில் உள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி புகார் மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:
 பெரும்புதூர் தொகுதி எம்பியாக 1999 முதல் 2009 வரை இருந்தேன். அப்போது, 1999-2000 நிதியாண்டில், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சம் மதிப்பீட்டில்  ஆவடியில் பஸ்கள் நின்று செல்ல வசதியாக மேற்கூரை, சிமென்ட் கான்கிரீட் தரை, நடைமேடையுடன் பஸ் நிலையம் கட்டித்தந்தேன். இதை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போதைய ஆவடி எம்எல்ஏவும், அமைச்சருமான மாபா பாண்டியராஜன், பஸ் நிலையத்தின் ஒருபுறம் 100 மீட்டர் நீளத்தில் சுவர் அமைத்து, அவரது படத்துடன் விளம்பரம் வைத்துள்ளார். இதனால், பஸ் நிலையம் பகலிலும் இருளாக உள்ளது. மேலும், எம்பி நிதியில் வைக்கப்பட்ட பெயர் பலகையையும் மறைத்து உள்ளார்.
இவ்வாறு பொதுமக்களிடையே எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்டதை போன்று ஒரு மாயையை அமைச்சர் உருவாக்கி உள்ளார். எனவே, எம்பி நிதியில் வைக்கப்பட்ட பெயர் பலகையை மறைத்துள்ள விளம்பர சுவரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : bus stand ,Avadi ,collector ,DMK MLA ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி