×

19ம் தேதி லாரிகளை இயக்க வேண்டாம்

நாமக்கல், செப்.17: நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி, செயலாளர் ரவி. பொருளாளர் சீரங்கன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, சமீபத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அதிகமாக உயர்த்திய அபராத தொகையை, மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். மாநில அரசும் இதனை வலியுறுத்தி, லாரி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்த்து உதவ வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 19ம் தேதி இந்தியா முழுவதும், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு நமது மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, நமது சங்க உறுப்பினர்களும், இதர லாரி உரிமையாளர்களும், வேன், ஆட்டோ போன்ற அனைத்து வாகனங்களையும் இயக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். முக்கியமான கோரிக்கை நிறைவேற, அனைவரும் இந்த தருணத்தில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்