×

எருமப்பட்டியில் டெங்கு தடுப்பு பயிற்சி முகாம்

சேந்தமங்கலம், செப்.17: எருமப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.  நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் சேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியப்பன், அருளாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி செயலாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை காவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குடிநீரை எவ்வாறு தூய்மை செய்வது, பொதுமக்களுக்கு தூய்மையான தண்ணீர் எப்படி வழங்குவது, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலமுரளிபாபு, ஆய்வாளர்கள் சந்திரன், சுப்ரமணி, பாலகுமார், செந்தில், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dengue Prevention Camp ,
× RELATED பாலசமுத்திரத்தில் டெங்கு தடுப்பு முகாம்