×

எருமப்பட்டி அருகே போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு

நாமக்கல், செப்.17:எருமப்பட்டி அருகே போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகேயுள்ள ஜம்புமடையில், போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் ரங்கநாதன், நமது கிராம அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், மாவட்ட மனநல மருத்துவர் குணமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மன நலப் பிரிவில் போதை பழக்கத்தில் இருந்து விடுபட, தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. போதைப் பொருட்கள் இல்லாத கிராமமாக ஜம்புமடை கிராமத்தை உருவாக்கவேண்டும். இதற்கு கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், நமது கிராம அமைப்பை சார்ந்த மோகன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : buffalo ,
× RELATED அலமாதி அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 5 கிலோ பறிமுதல்