×

பெரும்புதூர் அருகே பட்டுமுடையார்குப்பம் கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பெரும்புதூர், செப்.17: பட்டுமுடையார் குப்பம் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று
நடந்தது.
பெரும்புதூர் அருகே பட்டுமுடையார்குப்பம் கிராமத்தில் பழமையான சப்த கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புரனமைப்பு பணி நடைபெற்று கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. இதையடுத்து கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
முன்னதாக யாகசாலையில் கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கன்னிகா பூஜை, முதற்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாஹூதி பூஜை, விமான கலச ஸ்தாபனம் போன்ற பூஜைகள் நடந்தன.  பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீரை, சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து, செல்லப்பட்டு கோயில் கோபுர கலசத்தில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சப்த கன்னியம்மனை வழிபட்டனர்.  பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தத. பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பெரும்புதூர் எம்எல்ஏ பழனி, மதுரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வினைதீர்த்த முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தின் பின்புறம் இந்திரா நகரில் அருள்மிகு ஸ்ரீ வினைதீர்த்த முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளை கடந்த பழமையான கோயில் என்பதால், அங்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, கலச ஸ்தாபனம், மூன்று கால யாக பூஜை ஆகியவை நடந்தன.
தொடர்ந்து, நேற்று காலை அகஸ்திய கிருபா அன்புசெழியன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் தென்பாதி கிராமத்தில்  ஸ்ரீதரணி அம்மன் கோயில் ஊர் பொதுமக்களால் கட்டப்பட்டது.  இதன் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக தரணி அம்மனுக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதைதொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சார்யார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.  மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா வந்தது. இதில் ஆத்தூர், வடபாதி, தென்பாதி, புவனேஸ்வரி நகர், வடகால் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Pattumudiyayarkuppam Ogunniyamman Temple ,Mutturur ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...