×

மாணவியிடம் சில்மிஷம் வாலிபர் போக்சோவில் கைது

கிருஷ்ணகிரி, செப்.17: பாரூர் அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை, மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி அடுத்த பாரூர் அருகே, நாகர்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகள், அருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் வெற்றிவேல்(28) என்பவர், கடந்த 13ம் தேதி ஆசைவார்த்தை கூறி, அங்குள்ள பழைய கட்டிடம் ஒன்றுககு சிறுமியை அழைத்து சென்று, சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பி வந்து, பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வெற்றிவேல் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.  

Tags : Student ,child sex poxo ,
× RELATED சிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை