×

சாமியாபுரம் கூட்ரோட்டில் நிழற்கூடம் இன்றி பயணிகள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி, செப். 17:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். சேலம்- திருப்பத்தூர் மெயின்ரோட்டில், பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோடு உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு தனியார் அலுவலகத்துக்கு செல்பவர்கள், தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள், சாயாபுரம் கூட்டரோடு வந்து, அங்கிருந்து வெளியூர்களுக்கு பஸ் மூலம் செல்கின்றனர்.கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்களி–்ல் வரும் மக்கள், கூட்ரோடு பகுதியில் நிறுத்தி விட்டு வெளியூர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கூட்ரேடு பகுதியில் நிழற்கூடம் இல்லை. இதனால்  மழை வெயில் காலங்களில் திறந்தவெளியில் நின்று பொதுமக்கள் வதிக்குள்ளாகின்றனர். அருகில் உள்ள கடைகளின் முன் நிற்கும் பொதுமக்களை, கடைக்காரர்கள் திட்டி துரத்தி விடுகினறனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Samyapuram Gutrod ,
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்