ஆனைமலை அருகே தொழிலாளி மர்மச்சாவு: 3 பேர் கைது

பொள்ளாச்சி, செப். 17:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் அருண் பிரசாத்(32). கூலி தொழிலாளியான இவர் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி குடிபோதையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அருண் பிரசாத் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வேட்டைக்காரன் புதூரில் உள்ள விவசாயி செந்தில்குமார்(43) என்பவரது தோட்டத்தில் தேங்காய் திருடியதாக, அருண் பிரசாத்தை செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கணேஷ்குமார்(51), கருப்புசாமி(40) ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அருண் பிரசாத்துக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனைமலை போலீசார் 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவம்பாடி குளத்தில் தண்ணீர் கசிவு தடுக்க கோரிக்கைபொள்ளாச்சி, செப். 17: பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. சுமார் 50பேர், வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர். இதில், இந்து மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி குளத்தின் மூலம் விவசாயிகள் பலரும் பயனடைகின்றனர். தற்போது இந்த குளத்தின் நீர் தடுப்பு கதவுகள் பழுதடைந்துள்ளதால், குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பழுதான ஷட்டரிலிருந்து வெளியேறும் தண்ணீர் விவசாயத்துக்கும் பயன்படாமல் செல்கிறது. எனவே, எதிர்காலத்தில் மேலும் தண்ணீர் விரயமாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertising
Advertising

  சீனிவாசபுரம் ஊர்பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ‘பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலமானது தற்போது பழுதடைந்துள்ளது. அருகில் உள்ள மண் சாலை மிகவும் மோசமாகியுள்ளதால், அந்த வழியாக செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.  இதுகுறித்து, சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வப்போது மழைபெய்யும்போது சேறும் சகதியுமாகி மோசமாகியுள்ளது. எனவே, விரைவில் இணைப்பு சாலையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: