கடத்தூர் பகுதியில் செழித்து வளர்ந்த நிலக்கடலை செடிகள்

கடத்தூர், செப்.17: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான மணியம்பாடி, நத்தமேடு, புட்டிரெட்டிப்பட்டி, ராமியணஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சாகுபடி செய்யபட்ட நிலக்கடலை செடிகள் தற்போது செழித்து வளர்ந்து ரம்மியமாக காணப்படுகிறது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. தற்போது செழித்து வளர்ந்து பச்சைப்பசேலென காணப்படும் நிலையில், இந்த ஆண்டு நல்ல விளைச்சலை தரும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், உரமிடுதல் மற்றும் களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் தற்போது பெய்து வரும் மழையால் கடத்தூர் பகுதியில் ஈரப்பதத்துடன் மண் வளம் இருப்பதால் நல்ல விளைச்சலை காணமுடியும் மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றனர்.

Related Stories: