×

பாப்பாரப்பட்டியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்த தானம்

பாப்பாரப்பட்டி, செப்.17:பாப்பாரப்பட்டியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தேவபேரின்பன் நினைவு ரத்த தான முகாம் நடைபெற்றது. வட்டார தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் லோகு முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எழிலரசு, வாலிபர் சங்க நிர்வாகிகள் வேலாயுதம், முகிலன், ராகுல், மணிகண்டன், தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், விவசாயிகள் சங்க வட்டார தலைவர் சக்திவேல், புலவர் வேட்ராயன், மனித உரிமைகள் கட்சி தலைவர் துரைராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 35க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அர்ச்சுனன் ரத்த தானம் செய்தவர்களூக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags : Democratic Youth Association ,
× RELATED கந்தர்வகோட்டை புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் ரத்த தான முகாம்