கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்ட தரமற்ற தார்சாலைகளால் ஜல்லிபெயர்ந்து வரும் அவலம்

பொள்ளாச்சி, செப். 17:   பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு  ஊராட்சிகளில், பல  ஆண்டுகளாக பழுதான சாலைகள் புதுபிக்கும் பணி நடக்கிறது. ஆனால், சில கிராம பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட தார்ரோடு தரமற்றதாக உள்ளதாக புகார் எழுகிறது. மேலும், குறிப்பிட்ட சில மாதங்களில் ஜல்லிபெயர்ந்து வருவதால் மீண்டும் பள்ளமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதில், உடுமலை ேராடு சின்னாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட டிபி ரோடு முதல் கள்ளிபாளையம் கிராமத்துக்கு செல்லும் ரோடு வரை, பல ஆண்டுகளாக பழுதடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, ஊராட்சித்துறை மூலம் கடந்த சில மாதத்திற்கு முன்பு ரூ.53 லட்சத்தில் தார்ரோடு அமைக்கப்பட்டது.  ஆனால் அந்த ரோடு தரமற்றதாக போடப்பட்டதால், சுமார் இரண்டு மாதத்திற்குள்  ஜல்லி பெயர்ந்து சிதிலமடைந்து வருகிறது. ஊராட்சி நிதி மூலம் கிராம பகுதிகளில் ஏற்படுத்தப்படும் புதிய தார்சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள், பல ஆண்டுகள் உழைக்கும் வகையில் தரத்துடன் சாலை அமைக்க வேண்டும் என, பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: