சூதாடிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, செப்.17:  காவேரிப்பட்டணம் எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது  கரடிஹள்ளி பகுதியில் மாந்தோப்பில் 3 பேர் பணம் வைத்து சூதாடிக்  கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார், அவர்களை மடக்கி பிடித்து  விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மலைப்பையூர்  பகுதியைச் சேர்ந்த  தமிழ்(30), கரடிஹள்ளியைச் சேர்ந்த சண்முகம்(31), ஜெகதாப்பைச்  சேர்ந்த சின்னசாமி(27) என்பது தெரியவந்தது.  இதனையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags :
× RELATED சூதாடிய 4 பேர் கைது