×

அண்ணா பிறந்தநாள் விழா

அரூர், செப்.17: மொரப்பூரில் திமுக சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா நடைபெற்றது.அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாவின்  சிலைக்கு, திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி செயலாளர் மணி, வாசுதேவன், தாமோகன், சொக்கன், ராஜாமணி, தேவராஜ், விஜயன், அண்ணாதுரை, மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anna ,birthday party ,
× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று