×

வேப்பிலைப்பட்டியில் திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்

கடத்தூர், செப்.17: கடத்தூர் அருகே உள்ள வேப்பிலைப்பட்டி கிராமத்தில், திறந்த கிணற்றால் விபத்து அபாயம் உள்ளது. கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், கடத்தூர் -பொம்மிடி சாலையில் திறந்த நிலையில், சுமார் 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு சிறிய அளவில் சுற்றுச்சுவர் உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாததால், சிறுவர்கள் மற்றும் கிராமத்துக்குள் புதிதாக டூவீலரில் வருபவர்கள், கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, கிணற்றுக்கு பாதுகாப்பாக கம்பிவேலி அமைக்கக்கோரி, பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், மெத்தனம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Vepilipatti ,
× RELATED பராமரிப்பு இல்லாததால் அருப்புக்கோட்டையில் பாலம் இடியும் அபாயம்