×

தர்மபுரியில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, செப்.17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரியில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தர்மபுரி பிஎஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக, மாவட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில், விற்பனை அபிவிருத்தி பணியாளர் சட்டத்தை பாதுகாப்போம் என வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை தலைவர் சிங்காரவேலு தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.

கிளை செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து மற்றும்  மருந்து விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அத்தியாவசிய மருந்துகளை விலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும். விற்பனை அபிவிருத்தி பணியாளர் சட்டத்தை திருத்துவதை கைவிட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Drug sales representatives ,Dharmapuri ,
× RELATED கால் டாக்சிகள் இயக்குவதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்