×

சேவூரில் ரூ.15லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி,செப்.17: அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று  ரூ.15 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்  நடைபெற்றது. இந்த வார ஏலத்தில் நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.1400 வரை விலை அதிகரித்து இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  ஏலத்திற்காக மொத்தம் 700 நிலக்கடலை மூட்டைகள் கொண்டு வந்திருந்தன. குவிண்டாலுக்கு முதல் ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,200 வரையிலும்,  குவிண்டாலுக்கு இரண்டாவது ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,800 வரையிலும்,  பச்சை ரக நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ.6,090 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு  ஏலம் நடைபெற்றது.  இதில் புளியம்பட்டி, சேவூர், நம்பியூர், மலையப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம், அன்னூர், மங்கரசவலையபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து 30 விவசாயிகளும், திருச்செங்கோடு, மணப்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து 15 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.


Tags : Groundnut auction ,
× RELATED சேவூரில் ரூ.5 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்