×

கோவையில் போதையில் ரயிலை நிறுத்த முயன்றவர் பலி

கோவை, செப்.17:  கோவை ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (53). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தார். அதிக போதையில் இருந்த இவர் ரத்தினபுரி ரயில் பாதையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி டபுள் டக்கர் ரயில் வந்து கொண்டிருந்தது. தள்ளாட்டத்துடன் சென்ற ஆறுச்சாமி, ரயில் பாதையில் நின்று கையை ஆட்டி ரயிலை நிறுத்து முயன்றார்.
 இதை பார்த்த ரயில்வே கேட் கீப்பர் , ஆறுச்சாமியிடம் ரயில் வருகிறது, நகர்ந்து போ என சத்தம் போட்டார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலரும் அவரை நோக்கி சத்தம் போட்டு நகர்ந்து போகுமாறு கூறினர். ஆனால் ஆறுச்சாமி ரயில் பாதையில் நின்று கொண்டு ரயிலை நோக்கி கையை ஆட்டி, ‘‘ நான் சொன்னா கேட்ட மாட்டாயா, அங்கேயே நில்லு,’’ எனக்கூறிய படியே நடு தண்டவாளத்தில் நின்று கொண்டார்.

 பெங்களூர் டபுள் டக்கர் ரயில் டிரைவர், ஆறுச்சாமி ரயில் பாதையில் நின்று கையை ஆட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்து பிரேக் பிடித்து ஹாரன் அடித்து எச்சரித்தார். ஆனால் ஆறுச்சாமி விலகாமல் ரயில் பாதையில் நின்று கொண்டே இருந்தார். பிரேக் பிடித்தும் வேகமாக வந்த ரயில் ஆறுச்சாமியின் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி சிதைந்த நிலையில் ஆறுச்சாமி இறந்தார். இது ெதாடர்பாக கோவை ரயில்ேவ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



Tags : Goa ,
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...