12 பவுன் திருட்டு

கோவை, செப்.17:  கோவை வடவள்ளி நவாவூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (75). இவருக்கு 2 மகன் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றுகின்றனர். 4 மாதம் முன் சங்கர் அமெரிக்கா சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், நேற்று முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டினர், அமெரிக்காவில் உள்ள சங்கருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர்.இது தொடர்பாக சங்கர் தனது நண்பர் அனந்த கிருஷ்ணன் என்பவர் மூலமாக வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. வீட்டில் யாருமில்லை என நோட்டம் விட்டு தெரிந்த மர்ம நபர்கள் இரவில் கதவு பூட்டு உடைத்து திருடியதாக தெரிகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: