ெநடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாக்கடை அமைப்பதாக புகார்

சூலூர், செப். 17:  சூலூர் வழியாக செல்லும் திருச்சி சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை மிகவும் குறுகலாக இருந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தினர்.இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் சாலை விரிவாக்கம் நடந்து வருகின்றது. சூலூர் கொங்கு திருமண மண்டபத்திற்கு அருகே தற்போது சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக நில அளவீடு செய்து குறியீடப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 5 அடி அளவிற்கு நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாக்கடை கால்வாய் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Advertising
Advertising

 இதுகுறித்து திருச்சி சாலை விரிவாக்க குழுவினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சாக்கடை பணிகளை ஆய்வு செய்து பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். மேலும் அளவீடு செய்தபடி கட்ட உத்தரவிட்டு சென்றார். ஆனால் பொறியாளர் சென்றதும் ஒப்பந்ததாரர் மீண்டும் அதே முறையில் பணிகளை தொடர்ந்ததால் அதிருப்தியடைந்த திருச்சிசாலை விரிவாக்க குழுவினர் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தொடர்ந்து சாக்கடை அமைக்கும் பணி மேற்கொண்டால்  ஆலோசனை நடத்தி போராட்டம் நடத்த உள்ளதாக சாலை விரிவாக்கக் குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: